தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று (மே.02) வெளியானது. இதில் திமுக கூட்டணி அறுதி பெரும்பான்மையுடன் வென்று ஆட்சி அமைக்கிறது . மே 7ஆம் தேதி முதலமைச்சராகப் பதவியேற்க இருக்கும் மு.க. ஸ்டாலினுக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஸ்டாலின் - உதயநிதி ஸ்டாலினுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த சூரி! - சூரியின் படங்கள்
சென்னை: நகைச்சுவை நடிகர் சூரி, திமுக தலைவர் முக ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
actor soori
அந்த வகையில் நகைச்சுவை நடிகர் சூரி இன்று (மே 3) திமுக தலைவர் முக ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் சூரி பதிவிட்டுள்ளார். மேலும் "புரட்சி படைத்த முதல்வருக்கும் துணைநின்ற அவர் புதல்வருக்கும் வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார்.