குடியரசுத் தலைவர் மாளிகையில் 2021 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா நேற்று (நவ.9) நடைபெற்றது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கினார்.
இலக்கியம் மற்றும் கல்வித்துறையில் ஆற்றிய சேவையைப் பாராட்டி பட்டிமன்ற பேச்சாளரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
இவருக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன், சாலமன் பாப்பையாவுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் வெளியிட்ட பதிவு அதில், "கல்லூரி நாட்கள் முதல் என் பல குரல் நிகழ்ச்சியை உங்கள் குரலில் தான் தொடங்குவேன் என்றும், உங்கள் ரசிகனாக என் மனமார்ந்த வாழ்த்துகள் அய்யா" என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:ஆதாரவற்றவர்களின் வாரிசு: பத்ம விருது மூலம் அயோத்திக்கு பெருமை சேர்த்த ஷெரீப் சாச்சா!