சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு நுழைந்த சிவகார்த்திகேயன், மிகக் குறுகிய காலத்திலேயே அசுர வளர்ச்சி அடைந்துள்ளார். இவர் நடிப்பது மட்டுமின்றி படங்களையும் தயாரித்து வருகிறார்.
வரிசையாக ரிலீசாக உள்ள சிவகார்த்திகேயன் படங்கள்
தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நிலையில், இவரது 'டாக்டர்' திரைப்படம், பணிகள் அனைத்தும் முடிவடைந்து வெளியிட்டிற்கு காத்திருக்கிறது.
இந்நிலையில், தற்போது திரையரங்குகள் திறக்காதால், 'டாக்டர்' படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட படக்குழு முயற்சித்து வருவதாகவும் இதற்காக முன்னணி ஓடிடி தளம் ஒன்று பெரும் விலை கொடுத்து இதன் உரிமையை கைப்பற்றியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து சிவகார்த்திகேயன் தற்போது, சிபி சக்ரவர்த்தி இயக்கும் 'டான்' படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாகப் பிரியங்கா மோகன் நடிக்கிறார்.
மேலும், சிவகார்த்திகேயன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஐந்து படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் ஒரு படத்திற்கு 15 கோடி ரூபாய் வீதம் மொத்தம் 75 கோடி ரூபாய்க்கு சம்பளம் பேசியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தெலுங்கில் கால் பதிக்கிறாரா சிவகார்த்திகேயன்?
இந்நிலையில், சிவகார்த்திகேயனை வைத்து முன்னணி தெலுங்கு இயக்குநர் ஒருவர் படம் இயக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. தெலுங்கில் வெளியான ’ஜதி ரட்னலு’ படத்தை இயக்கிய அனுதீப், சிவகார்த்திகேயனை வைத்து இயக்கவுள்ளதாகவும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முழுக்க ழுழுக்க காமெடி அம்சம் கொண்ட திரைப்படமாக இப்படம் உருவாகப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தகவல் உண்மையானால் தெலுங்கில் சிவகார்த்திகேயன் நடிக்கும் முதல் படம் இதுவாக அமையும். மேலும், விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: டான் படத்துக்கு பிரேமம் லுக்