நடிகர் சிவா, பிரியா ஆனந்த், யோஷினோரி டஷிரோ, வி.டி.வி. கணேஷ், யோகி பாபு ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் 'சுமோ'. இயக்குநர் எஸ்.பி. ஹோசிமின் இயக்கிய இத்திரைப்படத்தினை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லரை ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான், தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டார்.
'சுமோ' மூலம் புதிய அவதாரம் எடுத்த 'அகில உலக சூப்பர் ஸ்டார்' - சுமோ ட்ரெய்லர்
'சுமோ' திரைப்படத்தில் வசனம், திரைக்கதை ஆகியவற்றை எழுதியுள்ள நடிகர் சிவா புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
sumo
’வணக்கம் சென்னை’ படத்தைத் தொடர்ந்து, 'மிர்ச்சி' சிவா, பிரியா ஆனந்த் இணைந்து நடித்துள்ள இந்தப் படத்தில் கதாநாயகனாக மட்டுமின்றி முதன்முறையாக திரைக்கதை-வசனங்களையும் எழுதியுள்ளார் நடிகர் சிவா.
குழந்தை முதல் பெரியவர்கள் வரை ரசிக்கக்கூடிய வகையில் இந்தோ - ஜப்பானிஸ் 'சுமோ' க்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம் ஆகும். ட்ரெய்லர் வெளியான சில மணிநேரங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.