தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சங்கத்துக்கு வேற செயலாளர் தான் பாக்கணும் போல - சூரியை வாழ்த்திய சிவகார்த்திகேயன் - சூரியின் படங்கள்

நகைச்சுவை நடிகர் சூரியின் பிறந்தநாளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டர் வாயிலாக வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

SK
SK

By

Published : Aug 27, 2021, 1:17 PM IST

நடிகர் சூரி இன்று (ஆகஸ்ட் 27) தனது 44ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவருக்கு திரைப் பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்வீட்டில், "எதிர் நீச்சல் அடி; வென்று ஏற்று கோடி. ஆள் செமயா இருக்கீங்க இனிமே ஃபுல்லா ஹீரோதான். நாங்க சங்கத்துக்கு வேற செயலாளர் தான் பாக்கணும் போல. என் அன்பு அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்" எனப் பதிவிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயனும் சூரியும் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'சீமராஜா' போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

இதையும் படிங்க: புரோட்டா சூரி முதல் 'விடுதலை' வரை... சூரியின் பிறந்த நாள் ஸ்பெஷல்

ABOUT THE AUTHOR

...view details