தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கெளரவித்த சிம்பு: வைரலாகும் 'சிஎஸ்கே சிங்கங்களா' - கொரோனா குமார் பட அப்டேட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கெளரவிக்கும் விதமாக நடிகர் சிம்பு பாடிய 'சிஎஸ்கே சிங்கங்களா' பாடல் சமூகவலைதளத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

simbu
simbu

By

Published : Sep 20, 2021, 3:00 PM IST

சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கக்தில் உருவாகி வரும் 'மாநாடு' படத்தில் நடித்து கொடுத்துள்ளார். இப்படம் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளிக்கு வெளியாகிறது.

இதனைத்தொடர்ந்து சிம்பு தனது 48 ஆவது படமாக, 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' பட இயக்குநர் கோகுல் இயக்கும் 'கொரோனா குமார்' படத்தில் நடிக்கிறார். வேல்ஸ் ஃபிலிம்ஸ் சார்பில் ஐசரி கே கணேஷ் இப்படத்தை தயாரிக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கவுள்ளது.

கரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் இரண்டாம் கட்ட போட்டிகள் நேற்று (செப்.19) துபாயில் தொடங்கியது. முதல் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கெளரவிக்கும் விதமாக சிம்பு தனது குரலில் 'சிஎஸ்கே சிங்கங்களா' என்னும் பாடலை வெளியிட்டார். லாலித் ஆனந்த் எழுதிய பாடலுக்கு ஜாவித் ரியாஸ் இசையமைத்துள்ளார். இந்த பாடலை சிம்புவுடன் இணைந்து, விஜய்யின் 'பிகில்', 'மாஸ்டர்' படங்களில் நடித்த பூவையார் பாடியுள்ளார்.

இப்பாடல் 'கொரோனா குமார்' படத்தில் இடம் பெறும் பாடல் என தெரிகிறது. தற்போது இந்த பாடல் சமூகவலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: CSK vs MI: வீழ்ந்தது‌ மும்பை; முதலிடத்தில் சென்னை

ABOUT THE AUTHOR

...view details