சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்த 'ஈஸ்வரன்' திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தைப் பெற்றது. தற்போது சிம்பு தனது உடல் எடையைக் குறைத்து அடுத்தடுத்த படங்களில் நடித்துவருகிறார். அவர் நடிப்பில் 'பத்து தல', 'மாநாடு' உள்ளிட்ட படங்கள் வரவுள்ளன.
இந்தாண்டு நமக்கு வெற்றிகரமான ஆண்டு: சிம்புவின் 'மாநாடு' டீசர் அப்டேட்! - மாநாடு டீசர் அப்டேட்
நடிகர் சிம்பு தனது பிறந்தநாள் அன்று ரசிகர்கள் யாரும் வீட்டிற்கு வர வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "எனது பிறந்தநாள் அன்று (பிப்ரவரி 3) நான் வெளியூர் செல்கிறேன். என் குடும்பத்தினர் வந்து வீட்டுமுன் காத்திருப்பதை நான் விரும்பவில்லை. அதனால் நண்பர்கள் யாரும் என் பிறந்தநாளன்று சந்திக்க வந்து ஏமாற்றமடைய வேண்டாம்.
உங்களை நேரடியாகச் சந்திக்கும் நிகழ்வை விரைவில் ஒருங்கிணைப்பேன். எனது பிறந்தநாளன்று மாநாடு படத்தின் டீசர் வெளியாகும். மகிழுங்கள். நிச்சயம் இனி நமது ஆண்டாக வெற்றிகரமான ஆண்டாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.