நடிகர் சிம்புவின் பிறந்த நாளான இன்று (பிப்ரவரி 3) முன்னிட்டு, அவர், கௌதம் கார்த்திக் இணைந்து நடித்து விரைவில் திரையரங்குகளில் வெளிவர இருக்கும் ‘பத்து தல’ திரைப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ, நேற்று (பிப்ரவரி 2) இரவு வெளிவரும் என்று அந்தப் படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்றிரவு ’பத்து தல’ திரைப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியானது. அதில் எஸ்டிஆர், ஏஜிஆர் என்னும் டான் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகத் தெரிகிறது. இதுவரை எஸ்டிஆரை பார்த்திராத ஒரு கதாபாத்திரத்தில் பார்க்கப் போகிறோம் என்ற நம்பிக்கையை இந்த கிளிம்ஸ் வீடியோ எஸ்டிஆர் ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் திரைப்படத்தில், சிலம்பரசன், கௌதம் கார்த்திக், கலையரசன், பிரியா பவானி சங்கர், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை ‘சில்லுனு ஒரு காதல்’, ’நெடுஞ்சாலை’ போன்ற திரைப்படத்தை இயக்கிய ஒபேலி என். கிருஷ்ணன் இந்தத் திரைப்படத்திற்கு திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார்.