நடிகர் சிம்புவின் தம்பி குறளரசனுக்கு கடந்த மாதம் திருமணம் ஆனது. தம்பியின் திருமண விழாவில் சிம்பு கலந்துகொண்ட புகைப்படம் வலைதளத்தில் வைரலானது. குண்டாக இருந்த சிம்பு உடல் எடையைக் குறைத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்திருந்தார். இதனைத்தொடர்ந்து நடிகர் சிம்பு இயக்குநர் வெங்கட் பிரபு இயக்க இருக்கும் 'மாநாடு' படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க இருக்கிறது.
'திருமணம் செய்யும் எண்ணமில்லை..!' - விளக்கமளித்த சிம்பு - marriage
நடிகர் சிம்பு தனது உறவுக்கார பெண்ணை விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியானது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும், இயக்குநர் ஹரி, முத்தையா, துரை ஆகியோர் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. சிம்புவின் கல்யாணம் எப்போது என்று அவரது தந்தை டி.ராஜேந்தரிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு கண்ணீருடன் பதில் அளித்த டி.ராஜேந்தர், சிம்புவிற்கு விரைவில் திருமணம் நடக்கும் என்று தெரிவித்திருந்தார். இ்ந்நிலையில், சிம்பு தனது உறவுக்கார பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. வலைதளப்பக்கங்களிலும் இந்த செய்தி வைரலானது.
இதனையடுத்து, இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக நடிகர் சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதில், "எனது திருமணம் குறித்த செய்தி ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அது முற்றிலும் பொய்யானது. ஊடக நண்பர்களால்தான் எனது வளர்ச்சிப் பாதை மேலோங்கி இருக்கிறது. எனது மகிழ்ச்சியையும், துக்கத்தையும் எடுத்துச் செல்வது நீங்கள்தான். ஊடகங்கள் மீது பெரு மரியாதை வைத்திருக்கிறேன். எனக்கு திருமணம் செய்யும் எண்ணம் தற்போது இல்லை. கண்டிப்பாக திருமணம் செய்யும்பொழுது நானே அந்த அறிவிப்பை வெளியிடுவேன்" என்று, தெரிவித்துள்ளார்.