தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

Maanaadu Success Meet: மாநாடு வெற்றிவிழா தள்ளிவைப்பு - சோகத்தில் சிம்பு ரசிகர்கள் - மாநாடு வெற்றி விழா

Maanaadu Success Meet: மாநாடு படத்தின் வெற்றிவிழா ஒமைக்ரான் பரவல் காரணமாக தள்ளிவைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிம்பு
சிம்பு

By

Published : Jan 2, 2022, 5:28 PM IST

Maanaadu Success Meet: வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் நவம்பர் மாதம் வெளியான திரைப்படம் 'மாநாடு'.

டைம் லூப்பை அடிப்படையாக வைத்து வெளியான இப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகைச் சேர்ந்தவர்களும் பாராட்டி வருகின்றனர்.

மாநாடு திரைப்படம் வெளியான 25 நாள்களில், 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளதால், சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இதனையொட்டி சிம்பு, தனது ரசிகர்களை வரும் 6ஆம் தேதி சந்திப்பதாக அறிவித்திருந்தார்.

இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், திடீரென விழா தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநாடு வெற்றிவிழா தள்ளிவைப்பு

இதுகுறித்து அகில இந்திய எஸ்டிஆர் தலைமை ரசிகர்கள் நற்பணி மன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஜனவரி 6ஆம் தேதி நடக்கவிருந்த மாநாடு படத்தின் வெற்றிவிழா, ஒமைக்ரான் பரவல் அதிகரித்துவரும் காரணத்தால், ரசிகர்களின் நலன் கருதி மாநாடு படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டம் தள்ளிவைக்கப்படுகிறது.

அதிகாரப்பூர்வமாகத் தேதி மீண்டும் அறிவிக்கப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:STR New Year Wish 2022: `உங்களில் ஒருவன் - சிலம்பரசன் புத்தாண்டு வாழ்த்து

ABOUT THE AUTHOR

...view details