தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் சிம்பு, கடந்த சில ஆண்டுகளாக எந்த சமூக வலைதளங்களிலும் கணக்கு தொடங்காமலிருந்தார்.
அவர் குறித்த அப்டேட்களை தெரிந்துகொள்ள விரும்பிய ரசிகர்கள், சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்குமாறு தொடர்ந்து அவரிடம் கோரிக்கை வைத்து வந்தனர். இதனையடுத்து ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று அவர் கடந்த அக்டோபர் மாதம் சமூக வலைதளங்களில் நுழைந்தார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சமூக வலைதளங்களில் நுழைந்ததால், அவர் அடிக்கடி தனது புகைப்படங்கள், பட அப்டேட், வீடியோக்கள் ஆகியவற்றை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் சிம்பு இன்ஸ்டாகிரம் கணக்கு தொடங்கிய 300 நாள்களில், மூன்று மில்லியன் நபர்கள் அவரை பின்தொடர ஆரம்பித்துள்ளனர். இவ்வளவு குறைவான நாள்களில் அதிக ஃபாலோயர்கள் பெற்ற முதல் கோலிவுட் நடிகர் என்ற பெருமையை அவர் இதன்மூலம் பெற்றுள்ளார். இதனை சிம்பு ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
சிம்புவின் இன்ஸ்டா கணக்கு நடிகர் சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முன்னதாக நிறைவடைந்த நிலையில், இப்படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. இதனையடுத்து அவர் தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும், ’வெந்து தணிந்தது காடு’ படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க:பிரபல நடிகைக்கு கிடைத்த விருது... குவியும் பாராட்டுகள்