வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள 'மாநாடு' படத்தில், சிம்பு ஹீரோவாக நடித்துள்ளார்.
இவருடன் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே. சூர்யா, பாரதிராஜா, உதயா, பிரேம்ஜி எனப் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் நிறைவடைந்து, திரை வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது.
தீபாவளிப் பண்டிகைக்கு வெளியாக இருந்த 'மாநாடு' திரைப்படம் சில காரணங்களால் தள்ளிப்போனது. இப்படம் நவம்பர் 25ஆம் தேதி திரைக்கு வருகிறது.
ஏற்கெனவே இப்படத்திலிருந்து வெளியான முதல் ட்ரெய்லரில், 'யுவர் டைம் ஸ்டார்ட் அகைன்' என சிம்பு பேசுவதிலிருந்து தொடங்கி எஸ்.ஜே. சூர்யா, 'வந்தான்...சுட்டான்...போனான்...ரிபீட்' என முடிந்தது.