தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஈஸ்வரனின் பட்டையை கிளப்பும் பாடல்கள் வெளியாகும் தேதி அறிவிப்பு - actor simbu Eeswaran movie songs

சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படத்தின் பாடல்கள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிம்பு
நடிகர் சிம்பு

By

Published : Dec 29, 2020, 6:49 PM IST

'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்திற்கு பிறகு தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான தோற்றத்திற்கு மாறியுள்ள நடிகர் சிம்பு, சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் முதல் பாடலான 'தமிழன் பாட்டு' ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில், தமன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் முழு பாடல்களும் ஜனவரி இரண்டாம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈஸ்வரன் பட போஸ்டர்

ஈஸ்வரன் படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் 'மாநாடு' படத்திலும், ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில், இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' உள்ளிட்ட படங்களிலும் சிம்பு பிஸியாக நடித்து வருகிறார்.

இதையும் படிங்க:சிம்புவின் ஈஸ்வரன் பட முதல் பாடல் வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details