தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய எஸ்.டி.ஆர் - நள்ளிரவில் குவிந்த ரசிகர்கள் - எஸ்.டி.ஆர்

நடிகர் சிம்பு இன்று தனது 37ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார்.

குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய எஸ்.டி.ஆர்
குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய எஸ்.டி.ஆர்

By

Published : Feb 3, 2020, 6:29 PM IST

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்பு பிரபல ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சிம்பு. எஸ்.டி.ஆர் என்று அழைக்கப்படும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் சிம்பு இன்று தனது 37ஆவது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவருக்கு ரசிகர்கள் மட்டுமின்றி, திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அதிகாலை 12 மணிக்கு சிம்புவின் பெற்றோர்கள், உடன்பிறந்தவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் சிலர் கலந்து கொண்டு அவருக்கு கேக் வேட்டி, பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். அதுமட்டுமின்றி சிம்பு ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக அவர் வீடு முன்பு நள்ளிரவு முதலே குவிந்தனர்.

அந்த குஷியில் ரசிகர்களுடன், கையசைத்து சிம்பு அன்பை பரிமாறிக்கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. மேலும் #HappyBirthdaySimbu என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு வெளியான, 'வந்தா ராஜாவா... தான் வருவேன்' படத்திற்குப் பிறகு, சிம்பு தற்போது 'மாநாடு' படத்தில் நடிக்கவுள்ளார். இதுதவிர, ஹன்சிகாவின் 50ஆவது படமான 'மஹா' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் சிம்பு நடித்துள்ளார்.

இதையும் படிங்க:ஆயிரத்தில் ஒருவன்' அல்ல; ஒருவனுக்குள் ஆயிரம் - பார்த்திபன் பகிர்ந்த காணொலி

ABOUT THE AUTHOR

...view details