தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மாஸ்டர் படத்தை பார்க்க ரசிகர்களுக்கு சிம்பு கோரிக்கை - மாஸ்டர் திரைப்படம்

"என் ரசிகர்கள் மாஸ்டர் படம் பாருங்கள். விஜய் அண்ணா ரசிகர்கள் ஈஸ்வரன் படம் பாருங்கள். இதனால் திரையரங்குகள் நிறையட்டும். கரோனா வாழ்க்கையோடு போராடி வெற்றிபெற்று நிற்கும் நாம், நமது மன அழுத்தங்களிலிருந்து வெளியாகி உங்களை மகிழ்விக்க இந்தப் படங்கள் நிச்சயம் உதவும்" என சிம்பு கூறியுள்ளார்.

simbhu in eeswaran movie
ஈஸ்வரன் படத்தில் சிம்பு

By

Published : Jan 4, 2021, 2:49 PM IST

Updated : Jan 4, 2021, 3:00 PM IST

சென்னை:திரையுலகம் புத்துயிர் பெற மாஸ்டர், ஈஸ்வரன் என இரு படங்களையும் ரசிகர்கள் பார்த்து ரசிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக சிம்பு இன்று (ஜன. 4) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஈஸ்வரன் பொங்கல் தினத்தன்று வெளிவர இருக்கிறது. மிக முக்கியமாக இந்தப் படம் வெகு குறுகிய காலத்தில் தயாரானதே திரையரங்குகளின் மீட்சிக்காகத்தான்.

திரையுலகமே முடங்கி, ஆன்லைன் வெளியீடுகள் ஓரளவில் திரைத்துறையை காப்பாற்றி வந்தாலும், திரையரங்குகள் திருவிழா கோலம் பூண வேண்டியது அவசியம்.

சிம்பு அறிக்கை

அதற்காகத்தான் இந்தக் கரோனா காலத்திலும் உயிரைப் பணயம் வைத்து நடித்து, தொழில்நுட்ப வேலைகள் எல்லாம் நடைபெற்றது சாதரண முயற்சியல்ல.

சிம்பு அறிக்கை

அதேசமயம் அண்ணன் விஜய்யின் மாஸ்டர் படம் முடிந்து ஒரு வருடம் ஆகியும் தனது படம் திரையரங்கில் வெளியாக வேண்டும் என உறுதியாக இருந்தார். இது தன்னை உருவாக்கிய மீடியமுக்கு அவர் செய்யும் மரியாதை.

மாஸ்டர் படத்தை அவர் நினைத்திருந்தால் ஆன்லைனில் வெளியிட்டிருக்கலாம். ஆனால் திரையரங்குகளுக்கு மீண்டும் விடிவுகாலம் வரவேண்டும் என பொறுத்திருந்து தற்போது வெளியிடுகிறார்.

திருவிழா நாள்களில் எப்போதும் இரண்டு பெரிய படங்கள் வெளிவரும். கலவையான படங்கள் வரும்போதும் பொதுமக்கள் திரையரங்குகளுக்கு பயமின்றி வருவார்கள். என் ரசிகர்கள் மாஸ்டர் படம் பாருங்கள். விஜய் அண்ணா ரசிகர்கள் ஈஸ்வரன் படம் பாருங்கள். இதனால் திரையரங்குகள் நிறையட்டும்.

கரோனா வாழ்க்கையோடு போராடி வெற்றிபெற்று நிற்கும் நாம், நமது மன அழுத்தங்களிலிருந்து வெளியாகி உங்களை மகிழ்விக்க இந்தப் படங்கள் நிச்சயம் உதவும். விநியோகஸ்தர்கள், திரையரங்குகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் நல்லபடியாக மீண்டு வந்து, திரையுலகம் செழிக்க வேண்டும். அதற்கான வாசலை மாஸ்டரும், ஈஸ்வரனும் செய்யும் என நம்புகிறேன்.

#அன்புசெய்வோம்

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

சிம்புவின் இந்த கோரிக்கைக்கு ரசிகர்கள் மட்டுமின்றி, திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். முன்னதாக, கடைகள், மால்கள், கடற்கரை என எல்லாமே முழுமையாக திறக்கப்பட்டிருப்பதுபோல் திரையரங்குகளுக்கும் 100 சதவீத இருக்கையுடன் அனுமதி தரவேண்டும் என முதலமைச்சருக்கு தனது அறிக்கையில் கோரிக்கை விடுத்திருந்தார் சிம்பு.

தற்போது 100 சதவீத இருக்கையுடன் திரையரங்குகள் செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது. அத்துடன் அதற்கான பாதுகாப்பு வழிமுறைகளையும் அரசு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: தூம் 4: இது தீபிகா டைம்?

Last Updated : Jan 4, 2021, 3:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details