ஹைதராபாத்: நடிகர் சித்தார்த் நடித்துள்ள மகா சமுத்திரம் திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் டிரைலர் வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் சித்தார்த் கலந்துகொள்ளவில்லை. இதுதொடர்பாக இயக்குநர் அஜய்பூபதியிடம் கேள்வி எழுப்பியபோது, சித்தார்த் ஒரு அறுவை சிகிச்சைக்காக லண்டன் சென்றுள்ளார்.
மருத்துவமனையில் நடிகர் சித்தார்த்... ரசிகர்கள் வருத்தம்... - நடிகர் சித்தார்த் மருத்துவமனையில்
நடிகர் சித்தார்த் அறுவை சிகிச்சைக்காக லண்டன் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக இந்த நிகழ்ச்சியில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை எனத் தெரிவித்தார். ட்விட்டரில் எப்போதும் சமூக கருத்துகளைப் பதிவிடுவதிலும், சமூகப்பிரச்னைகளுக்கு எதிராக குரலற்றவர்களின் குரலாக ஓங்கி ஒலிப்பதிலும் முக்கியமானவர், நடிகர் சித்தார்த். இதனாலேயே அண்மையில் பாஜகவினர் சிலர், இவரது குடும்பத்திற்குக் கொலை மிரட்டல் விடுத்தனர். அதுமட்டுமல்லாமல், தான் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய செய்திக்கு, அச்செய்திகளைப் பரப்பியவர்களைக் கண்டித்து, கடும் அதிருப்தியைப் பகிர்ந்திருந்தார்.
இதையும் படிங்க:நடிகர் சித்தார்த்துக்கு என்னாச்சு?