தமிழில் 'பாய்ஸ்', 'அரண்மனை 2' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சித்தார்த். இவர் தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகர் சித்தார்த் சினிமா மட்டுமின்றி சமூக பிரச்னைகள் குறித்தும் - அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சிகளைக் குறித்தும் அவ்வப்போது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை தெரிவித்தும் வருவார். அதிலும் குறிப்பாக மோடியை விமர்சித்து இவர் பதிவிடும் ட்வீட் இணையத்தில் வைரலாகியும் வரும்.