தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஸ்புட்னிக் தடுப்பூசி செலுத்திக் கொண்ட சிபி சத்யராஜ்! - தடுப்பூசி செலுத்திக் கொண்ட சிபி சத்யராஜ்

சென்னை: நடிகர் சிபி சத்யராஜ் ’ஸ்புட்னிக் வி’ தடுப்பூசி செலுத்திக் கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சிபி சத்யராஜ்
சிபி சத்யராஜ்

By

Published : Jul 10, 2021, 5:39 PM IST

இந்தியாவில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு குறைவாக பதிவாகி வருகிறது. இதனிடையே மூன்றாவது அலைக்கு முன் கரோனா தடுப்பூசியை அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

ஆனால் தடுப்பூசி குறித்து பரவிவரும் வதந்திகள் காரணமாக மக்கள் அதனைத் தவிர்த்து வருகின்றனர். இதனைத் தடுக்கும் வகையில் திரையுலகினர் பலரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் சிபி சத்யராஜ் இன்று (ஜூலை.10) ஸ்புட்னிக் வி தடுப்பூசி செலுத்திக் கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

திரையுலகப் பிரபலங்கள் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டு வரும் நிலையில், நடிகர் ஜெய்யும், சிபி சத்யராஜும் மட்டும் ஸ்புட்னிக் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பற்றிக்கொள்ள கிடைத்த மற்றொரு கரம்... 2ஆவது குழந்தைக்கு தந்தையான பாஜி!

ABOUT THE AUTHOR

...view details