நடிகர் சாந்தனு தற்போது விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகவிருந்த இப்படம் ஊரடங்கு உத்தரவு காரணமாக, வெளியீடு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சாந்தனு 'ராவணக் கோட்டம்' என்னும் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் தொடங்கப்படவுள்ளது.
இந்த ஊரடங்கு காலத்தில் சாந்தனு புதிதாக யூடியூப் சேனல் ஒன்று தொடங்கி, அதில் பாக்கியராஜின் பேட்டிகள், குறும்படங்கள், விழிப்புணர்வு வீடியோக்கள் என பதிவிட்டு வருகிறார்.
இதனையடுத்து சாந்தனு தற்போது புதுமுக இயக்குனர் ஸ்ரீஜர் இயக்க உள்ள படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் அதுல்யா ரவி, மனோபாலா, ஆனந்தராஜ், மயில்சாமி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.
இவர்களுடன் பாக்யராஜும் முக்கிய கதாபாத்திரம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை ரவீந்தர் சந்திரசேகர், சிவசுப்பிரமணியன், சரவண பிரியன் ஆகியோர் இணைந்து தயாரிக்க உள்ளனர்.
தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரின் பிறந்த நாளான இன்று ( ஜூலை 8) படக்குழுவினர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதன்படி இப்படத்திற்கு 'முருங்கைகாய் சிப்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
'முருங்கைகாய் சிப்ஸ்' படத்திற்காக முதல்முறையாக இணையும் சாந்தனு - அதுல்யா..! - முருங்கைகாய் சிப்ஸ் பட அப்டேட்
சென்னை: சாந்தனு - அதுல்யா ரவி நடிக்கும் படத்துக்கு 'முருங்கைகாய் சிப்ஸ்' என்று பெயரிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளது.
முருங்கைகாய் சிப்ஸ்
புதுமணத் தம்பதியரின் முதலிரவில் நடைபெறும் நிகழ்வுகளை நகைச்சுவை திரைக்கதையாக இயக்குநர் எழுதியுள்ளார். இசையமைப்பாளர் தரண் இசையமைக்கும் இப்படத்திற்கு ரமேஷ் சக்கரவர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார்.