தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள நடிகர் செந்தில் அறிவுறுத்தல்!

சென்னை: கரோனா பாதிப்பால் சிகிச்சைப் பெற்றுவரும் நடிகர் செந்தில் அனைவரும் கட்டாயம் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

senthil
senthil

By

Published : Apr 14, 2021, 12:44 PM IST

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கோலோச்சிய நடிகர் செந்திலுக்கு நேற்று (ஏப்ரல் 13) கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. செந்திலைத் தொடர்ந்து அவரது மனைவி, மகன், மருமகள் ஆகியோருக்கும் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள நடிகர் செந்தில் அறிவுறுத்தல்

இந்நிலையில்,செந்தில் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "எனக்கு கரோனா பாதிப்பு இருப்பது உண்மைதான். அதற்காக தற்போது சிகிச்சை எடுத்துவருகிறேன். மாநகராட்சி மூலம் போடப்பட்ட கரோனா தடுப்பூசியால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. எனவே மக்களாகிய நீங்கள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு பாதுகாப்பாக இருங்கள்" என அறிவுறுத்தியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details