தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர் சென்றாயன். சினிமா மீது தீராத காதல் கொண்ட இவர், சினிமாவில் தனக்கென ஓர் இடத்தை பிடிக்க விரும்பினார். அவரது விடா முயற்சியின் காரணமாகவே தற்போது அவர் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
தனது சினிமா கனவை நினைவாக்கிய சென்றாயன், ஒரு வேலை சாப்பாடு கிடைக்கும் என்பதற்காக பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக பல மேடைகளில் ஆனந்த கண்ணீருடன் தெரிவித்திருக்கிறார்.
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் திரைப்படம் மூலம் அறிமுகமான சென்றாயன் தொடரந்து சிலம்பாட்டம், ஆடுகளம், மூடர் கூடம், மெட்ரோ உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
ரசிகர்களுக்கு சிரிப்பு காட்டிவந்த சென்றாயன், ஜீவா நடிப்பில் வெளியான ரௌத்திரம் படத்தில் சீரியஸ் வில்லனாக நடித்து தனது நவரசத்தையும் காட்டியிருப்பார். நயன்தாரா- மம்முட்டி நடிப்பில் வெளியான வாசுகி (மலையாளத்தில் புதிய நியமம்) படத்தில் முக்கிய காட்சியொன்றில் தேனீ போல் கொட்டி அவர் செய்த விஷமத்தனம் மிரட்டல்