நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா ஒரு பிரபலமான ஊட்டச்சத்து நிபுணர் ஆவார். இவர் கரோனா காலத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவை இலவசமாக வழங்கும் விதமாக 'மகிழ்மதி' என்னும் இயக்கத்தை தொடங்கினார்.
மேலும் உலகின் மகிப்பெரிய மதிய உணவுத் திட்டமான 'அக்ஷய பாத்திரா'வின் விளம்பரத் தூதுவர் ஆவார். அமெரிக்க சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் ஊட்டச்சத்து துறையில், இவர் செய்த சேவைகளை அங்கீகரித்து திவ்யாவிற்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
மருத்துவ துறை, நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து பிரதமர் மோடிக்கு திவ்யா எழுதிய கடிதம் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது. அதுமட்டுமல்லாது விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பீடுகளை விவசாயத்துறை நேரடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில், அரசியலில் நடக்கும் முறைகேடுகளை எதிர்க்க விரைவில் அரசியலுக்கு வருவேன் என திவ்யா அறிவித்திருந்தார். அதுகுறித்து திவ்யா தனது சமூகவலைதளப்பக்கத்தில், " நான் சிறுவயதாக இருந்த போது மிகவும் சுட்டித்தனமாகவும் ஒல்லியான குழந்தையாகவும் இருந்தேன். என் அப்பாவும் அம்மாவும் எனக்கு நிறைய சுவாரஸ்யமான கதைகளைச் சொல்லி என்னைச் சாப்பிட வைத்து உடல் எடையை அதிகரிக்கச் செய்தனர்.