சின்னத்திரையிலிருந்து, வெள்ளித்திரைக்கு நுழைந்த சிவகார்த்திகேயன், மிகக் குறுகிய காலத்திலேயே அசுர வளர்ச்சி அடைந்துள்ளார். நடிப்பது மட்டுமின்றி படங்களைத் தயாரிப்பது, பாடல் எழுதுவது, பாட்டுப் பாடுவது எனப் பன்முகத்திறமை கொண்டவராக வலம்வருகிறார்.
டாக்டர் படத்தின் இமாலய வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் 'டான்' திரைப்படம் தயாராகியுள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை தெலுங்கில் வெளியான ’ஜாதி ரட்னலு’ இயக்குநர் அனுதீப் இயக்குகிறார்.