தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

செக்யூரிட்டி டூ தமிழ் ஆசிரியர் - சதீஷ் அறிமுகப்படுத்திய மாமனிதர்! - சதீஷ் அறிமுகப்படுத்திய மாமனிதர்

பிராங், ஜாலியான காணொலிகள் மூலம் தனது ரசிகர்களுக்கு கலகலப்பு ஏற்படுத்திவந்த சதீஷ் தற்போது உத்வேகம் அளிக்கும்விதமாக காணொலி ஒன்றை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Actor sathish shares inspiring video
Comedy actor Sathish

By

Published : Mar 19, 2020, 10:03 PM IST

Updated : Mar 20, 2020, 2:41 PM IST

சென்னை: செக்யூரிட்டி வேலையிலிருந்து பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரியவிருக்கும் நபரை அறிமுகப்படுத்தி, அவர் தனக்கு உத்வேகம் அளிப்பதாக நகைச்சுவை நடிகர் சதீஷ் குறிப்பிட்டுள்ளார்.

கரோனா பீதியால் நடிகர், நடிகைகள் படப்பிடிப்புக்கு எங்கும் செல்லாமல் இருந்தவரும் நிலையில், நகைச்சுவை நடிகர் சதீஷ் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும்விதமாக காணொலி ஒன்றை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அந்தக் காணொலியில் தோன்றும் சதீஷ், "நமது வாழ்க்கையில் எங்கிருந்து வேண்டுமானலும் நமக்கு உத்வேகம் கிடைக்கலாம். அந்த வகையில் நமக்கு உத்வேகம் அளிக்கும் பாலு சாமி என்கிற நபரை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் செக்யூரிட்டியாகப் பணியாற்றிய இவர் மிகவும் தன்மையாகப் பேசி பழகுவார். அடுத்த மாதத்திருந்து வேலைக்கு வரமாட்டேன் எனவும், வேலம்மாள் பள்ளியில் பணியாற்றவிருப்பதாகவும் தெரிவித்தார்.

சரி என்ன வேலை செய்யப்போகிறார் என்று விசாரித்தபோது தமிழ் ஆசிரியராகப் பணிபுரிய உள்ளேன், ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடம் எடுக்கவுள்ளேன் என்றார். எனக்கு இதைக் கேட்டு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. எம்.ஏ., எம்.பில்., பி.எட். படித்த இவர் நல்ல வேலை கிடைக்கும் வரை செக்யூரிட்டியாக எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் பணியாற்றிவந்துள்ளார் என்பது அதன் பின்தான் தெரியவந்தது என்று கூறி அவரை அறிமுகப்படுத்துகிறார்.

பின்னர் இவர் உண்மையில் மிகப்பெரிய உத்வேகத்தை நமக்கு அளிப்பவராக இருக்கிறார்" என்றார்.

பொதுவாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் பிராங் காணொலிகள், ஜாலியான காணொலிகள் எனப் பதிவிட்டு ரசிகர்களுக்கு கலகலப்பை ஏற்படுத்திவந்த சதீஷ், இம்முறை ஒரு மாமனிதரை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க:அறைஞ்சா ஹர்பஜன் சிங் மாதிரி இருப்பேன் - ஹர்பஜன் சிங்கிடம் காணொலியைக் காண்பித்த சதீஷ்

Last Updated : Mar 20, 2020, 2:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details