தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகராக வலம்வருபவர் நடிகர் சதீஷ். தனது யதார்த்தமான நகைச்சுவை மூலம் ரசிகர்கள் மனத்தில் தனி இடத்தைப் பிடித்துள்ளார்.
பெண் குழந்தைக்கு தந்தையான சதீஷ்!
சென்னை: பெண் குழந்தைக்கு தந்தையாகியிருப்பதாக நடிகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
sathish
இவர் 'சிக்சர்' பட இயக்குநர் சச்சியின் சகோதரி சிந்துவை பெற்றோர் சம்மதத்துடன் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில், பெண் குழந்தைக்கு தந்தையாகியிருப்பதாக சதீஷ் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதையடுத்து சதீஷுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் சமூகவலைதளத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.