இயக்குநர் பொன்ராம் தற்போது நடிகர் சசிக்குமாரை வைத்து எம்ஜிஆர் மகன் என்ற தலைப்பில் புதிய படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.
இப்படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடிக்கவுள்ளார். மேலும் இவர்களுடன் சமுத்திரக்கனி, சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பொன்ராமின் வழக்கமான கிராமத்து சென்டிமென்ட், காமெடி கலந்த திரைக்கதையுடன் படம் உருவாகவுள்ளது.