சமீபத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான ஏ1 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பாக இயக்குநர் கோட்டப்பாடி ஜே.ராஜேஷ் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் சந்தானம் நடிக்க உள்ளார்.

சயின்ஸ் ஃபிக்ஷன் பின்னணியில் உருவாக உள்ள இப்படம் முழுக்க முழுக்க காமெடி படமாக அமைய உள்ளது. இப்படத்தின் பெயர் செப்டம்பர் 5ஆம் தேதி மாலை அறிவிக்க படக்குழு முடிவு செய்துள்ளது. விரைவில் இப்படத்தின் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் முதன் முறையாக சந்தானம் மூன்று வேடத்தில் நடிக்க உள்ளதாகத் தெரிகின்றது.
'ஜெயம்கொண்டான்’, ‘கண்டேன் காதலை’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கண்ணன், சந்தானத்தை வைத்து 'வித்தைக்காரன்' படத்தை இயக்க உள்ளார். அதேபோல், சந்தானத்தின் ‘டகால்டி’ , ‘சர்வர் சுந்தரம்’ ஆகிய படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.