தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மீண்டும் 'A1' கூட்டணியில் சந்தானம்: பூஜையுடன் தொடங்கிய புரோடக்சன் நம்பர் 1 - ஏ1 கூட்டணியில் சந்தானம்

'A1' படத்தின் கூட்டணியில் நடிகர் சந்தானம் மீண்டும் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

Santhanam
Santhanam

By

Published : Jan 20, 2020, 10:10 PM IST

இயக்குநர் ஜான்சன்.கே கதை, திரைக்கதை, வசனம் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் நடிகர் சந்தானம் நடித்து கடந்த வருடம் வெளியான படம் 'A1'. இந்தப் படத்தின் நகைச்சுவை காட்சிகளும், வசனங்களும், பாடல்களும் அனைத்து தரப்பு மக்கள், சமூக வலைத்தளங்கள் , விமர்சகர்கள் என்று அனைவரது பாராட்டுகளையும் பெற்றது. இதனால் இப்படம் பெரும் வெற்றிப் பெற்றது.

புதியபடத்தின் பூஜையில் சந்தானம்

இதனையடுத்து மீண்டும் ஒரு நகைச்சுவை படத்தில் நடிகர் சந்தானம் - இயக்குநர் ஜான்சன்.கே - இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கூட்டணி இணையவுள்ளது. லார்க் ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்க உள்ளனர். இன்னும் பெயரிடப்படாத
இந்தப் படத்திற்காக தற்காலிகமாக புரோடக்சன் நம்பர் 1 என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இந்தப் பூஜையில் சந்தானம், இயக்குநர் ஜான்சன்.கே, 'மொட்டை' ராஜேந்திரன் உள்ளிட்ட படக்குழுவினருடன் தயாரிப்பாளர் மதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 'A1' படத்தைப் போலவே இந்தப் படமும் நல்ல நகைச்சுவை விருந்தாக அமையும் என படக்குழுவினர் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details