தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கன்னட இயக்குநர் படத்தில் நடிக்கும் சந்தானம்! - கன்னட சினிமாவில் சந்தானம்

தமிழ்ப் படங்களில் நடித்துவந்த சந்தானம், இப்போது கன்னட திரைப்பட இயக்குநருடன் இணைந்துள்ளார்.

சந்தானம்
சந்தானம்

By

Published : Jan 20, 2022, 6:17 AM IST

டாப் ஹீரோக்கள் பலரும் தெலுங்கு, கன்னட இயக்குநர்களுடன் கைக்கோத்து பயணமாகிக் கொண்டிருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். நகைச்சுவை நடிகராக தன்னுடைய திரைப் பயணத்தைத் தொடங்கிய சந்தானம், கேலி, கிண்டல் செய்யும் நகைச்சுவையால் ரசிகர்களிடையே ஒரு இடத்தை தக்கவைத்துள்ளார்.

சமீப காலங்களாக அவர் நகைச்சுவை நடிகர் என்ற பிம்பத்தைத் தாண்டி ஏராளமான திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துவருகிறார்.

கன்னட சினிமாவில் சந்தானம்

அந்த வகையில் அவர், தற்போது தமிழ் சினிமாவைக் கடந்து கன்னட திரைப்பட இயக்குநர் ஒருவருடன் கைக்கோத்துள்ளார்.

ட்விட்டர் பதிவு

கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ் என்பவருடன் புதிதாக இணைந்து நடிக்க இருக்கிறார். அந்தப் படத்தை ஃபார்ட்சூன் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் 15ஆவது படமாக இது உருவாகிறது. படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று சந்தானம் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஜெய்பீம் திரைப்படத்திற்கு மற்றுமொரு மகுடம்! என்னவா இருக்கும்?

ABOUT THE AUTHOR

...view details