2015ஆம் ஆண்டு தொடங்கிய 'சர்வர் சுந்தரம்' திரைப்படம் 2017ஆம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பலமுறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போய், கிடப்பில் இருந்துவருகிறது. இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்துள்ளார். நடிகர் நாகேஷின் பேரனும், நடிகர் ஆனந்த் பாபுவின் மகனுமான பிஜேஷ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சந்தானத்தின் 'சர்வர் சுந்தரம்' வெளியாகும் தேதி மீண்டும் அறிவிப்பு! - சந்தானத்தின் சர்வர் சுந்தரம்
சென்னை: சந்தானம் நடித்த 'சர்வர் சுந்தரம்' திரைப்படம் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
servar
படத்துக்கு இசை - சந்தோஷ் நாராயணன். கெனன்யா பிலிம்ஸ் படத்தைத் தயாரிக்க, ஆனந்த் பால்கி படத்தை இயக்கியுள்ளார். பலமுறை வெளியீட்டுத் தேதி அறிவித்தும் தள்ளிப்போன இப்படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.