இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி இயக்குநர் பா.இரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்ஷன் தயாரிக்கும் 'ரைட்டர்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஃபிராங்கிளின் ஜேக்கப் (Franklin Jacob) இயக்குகிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.
சமுத்திரக்கனியின் ’ரைட்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! - ரைட்டர் ஃபர்ஸ்ட் லுக்
சென்னை: சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகிவரும் 'ரைட்டர்' படத்தின் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.
samuthirakani
இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் தற்போது வெளியாகியுள்ளன. இவற்றைப் பார்க்கும்போது காவல் துறையில் இருக்கும் ரைட்டர் பதவி குறித்தான கதையசம்சத்தை இப்படம் கொண்டிருக்கும் என சமூக வலைதளத்தில் கருத்துகள் வெளியாகியுள்ளன.