தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் தளர்வுகள் அனைத்தும் திரும்பப்பெறப்பட்டு, 12 நாட்களுக்கு ஊரடங்கு மீண்டும் கடுமையாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரோனா தொற்று குறித்து நடிகர் எஸ்.வி.சேகர் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் தான் வெளியே செல்லவில்லை என்றும், சட்டத்தை நாம் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும், அப்போதுதான் சட்டம் நமக்கு பாதுகாப்பு தரும் என்றும் தெரிவித்துள்ளார்.