இயக்குநர் ஜெய்சங்கர் இயக்கத்தில் ஆர்.கே சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வேட்டை நாய்'. இதில் ஆர். கே சுரேஷூக்கு நயாகியாக சுபிக்ஷா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் வாணி விஸ்வநாத், தம்பி ராமையா, சரவண சக்தி உள்ளிட்டோர் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாது சிறிய இடைவேளைக்குப் பின் நடிகர் ராம்கி, இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சுரபி பிக்ஷர்ஸ் ஜோதி முருகன் - தாய் மூவிஸ் விஜய் கார்த்திக் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி ராமசாமி, துணைத்தலைவர் கதிரேசன், தயாரிப்பாளர்கள் சத்யபிரகாஷ் ஜெயின், அழகன்தமிழ்மணி, விடியல் ராஜு, இயக்குநர்கள் ஆர்வி உதயகுமார், பவித்ரன் உள்ளிட்டோருடன் படக்குழுவினரும் கலந்துகொண்டனர்.