தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ராணாவுக்கு இரண்டே மாதத்தில் டும் டும் டும்! - லேட்டஸ்ட் சினிமா செய்திகள்

நடிகர் ராணாவின் திருமண தேதி குறித்தத் தகவலை, அவரது தந்தை சுரேஷ்பாபு அறிவித்துள்ளார்.

நடிகர் ராணா
நடிகர் ராணா

By

Published : May 31, 2020, 6:41 PM IST

'பாகுபலி' படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர், ராணா. இவர் தற்போது பிரபு சாலமன் இயக்கத்தில் 'காடன்' என்னும் படத்தில் நடித்துள்ளார்.

இவருக்கும் ஹைதராபாத்தைச் சேர்ந்த மிஹீகா பஜாஜ் என்பவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை நடிகர் ராணா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார்.

இவர்களது திருமணம் வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இது குறித்து முறையான தகவல் வெளியாகவில்லை என்பதால் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.

இந்நிலையில் இச்செய்தியை நடிகர் ராணாவின் தந்தை சுரேஷ் பாபு தற்போது உறுதி செய்துள்ளார். மேலும் 'இந்த திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள்' என்றும் கூறியுள்ளார்.

'விரைவில் எங்கு திருமணம் நடைபெறவுள்ளது' என்பது குறித்த தகவல் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details