நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது 'அண்ணாத்த' திரைப்படம் உருவாகி உள்ளது.
சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள, இத்திரைப்படத்தில் ரஜினியுடன் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. 'அண்ணாத்த' படம் வருகிற தீபாவளி பண்டிகையன்று வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை விமான நிலையத்திலிருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்ற நடிகர் ரஜினிகாந்த் இந்நிலையில் முன்னர் ரஜினிகாந்த் படப்பிடிப்பில் இருந்த சமயத்தில் உடல்நிலை குன்றியது. அப்போது அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டு வீடு திரும்பினார். ஓய்வுக்குப் பின்னரே மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
சென்னை விமான நிலையத்திலிருந்து அமெரிக்கா புறப்பட்ட ரஜினிகாந்த் இந்நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டுக்கு சிகிச்சைக்குச் செல்லாமல் இருந்தார்.
தற்போது அமெரிக்காவில் பாதிப்பு குறைந்திருப்பதால், மீண்டும் அமெரிக்கா செல்ல நடிகர் ரஜினி திட்டமிட்டிருந்தார்.
வெளிநாடு செல்வதற்கு ஒன்றிய அரசும் அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து இன்று (ஜுன்.19) காலை 3 மணி அளவில், ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் இருந்து மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா புறப்பட்டார்.
இதையும் படிங்க : தளபதி65 ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!