தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அமெரிக்காவில் ரசிகர்களைச் சந்தித்த 'அண்ணாத்த' ரஜினி! - அண்ணாத்த வெளியாகும் தேதி

அமெரிக்காவிலிருந்து சென்னைக்குத் திரும்பும் முன் ரஜினி அங்கிருந்த தனது ரசிகர்களைச் சந்தித்துப் புகைப்படங்களை எடுத்துக்கொண்டார். அந்தப் படங்கள் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகிவருகின்றன.

ரசிகர்களுடன் ரஜினி
ரசிகர்களுடன் ரஜினி

By

Published : Jul 8, 2021, 6:07 PM IST

'சிறுத்தை' சிவா இயக்கத்தில் உருவாகிவரும் 'அண்ணாத்த' படத்தில் தனது பகுதியை ரஜினி முடித்துக்கொடுத்தார். இதனைத்தொடர்ந்து மருத்துவ சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்தார்.

ரசிகருடன் ரஜினி

அதன்படி, கரோனா அச்சுறுத்தல் காரணமாக ரஜினி சிறப்பு தனி விமானத்தில் செல்ல ஒன்றிய அரசிடம் கோரிக்கைவைத்தார். இதனை ஏற்ற ஒன்றிய அரசு, அவரை தனி விமானத்தில் அமெரிக்கா செல்ல அனுமதி அளித்தது.

ரசிகருடன் ரஜினி

இதனையடுத்து அமெரிக்கா சென்ற ரஜினி, அங்குள்ள மருத்துவமனையில், பரிசோதனை மேற்கொண்டார். அதன்பின் மருத்துவமனையிலிருந்து தனது மகள் ஐஸ்வர்யாவுடன் ரஜினி முகக்கவசமின்றி வெளியே வந்த புகைப்படம் சமீபத்தில் சமூகவலைதளத்தில் வைரலானது.

ரசிகர்களுடன் ரஜினி

இதனையடுத்து அமெரிக்கா சில நாள்கள் தங்கிருந்த ரஜினி, நாளை (ஜூலை 9) அதிகாலை சென்னை திரும்புகிறார். இந்த நிலையில், அமெரிக்காவில் இருக்கும் தனது ரசிகர்களை ரஜினி சந்தித்து புகைப்படங்களை எடுத்துக்கொண்டார். அந்தப் புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகிவருகின்றன.

ரசிகருடன் ரஜினி

அதிலும் குறிப்பாக ரஜினியின் அருகில் வளர்ப்பு நாய் ஒன்று அமர்ந்திருக்கும் புகைப்படம் ட்விட்டரில் ட்ரெண்டாகியுள்ளது. சென்னை திரும்பிய ரஜினி, 'அண்ணாத்த' படத்தில், புதிய பாடல் காட்சியில் கலந்துகொள்ள இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 'அண்ணாத்த' திரைப்படம் இந்தாண்டு தீபாவளி கொண்டாட்டமாக நவம்பர் 4ஆம் தேதி வெளியாகிறது.

ரசிகருடன் ரஜினி

இதையும் படிங்க: மேற்கு விர்ஜினியாவில் சூப்பர் ஸ்டார் - வைரலாகும் புகைப்படங்கள்!

ABOUT THE AUTHOR

...view details