தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இயக்குநர் ராஜசேகர் மரணம்! - ரசிகர்கள் அதிர்ச்சி - இயக்குநர் பாரதிராஜா

சென்னை: இயக்குநரும் நடிகருமான ராஜசேகர் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார்.

rajasekar

By

Published : Sep 8, 2019, 12:20 PM IST

Updated : Sep 9, 2019, 8:51 AM IST

'பாலைவனச் சோலை' படத்தை இயக்கிய இரட்டை இயக்குநர்களில் ஒருவர் ராஜசேகர். இப்படத்தை ராபர்ட் - ராஜசேகர் ஆகியோர் இணைந்து இயக்கினர்.

இயக்குநர் பாரதிராஜா இயக்கிய 'நிழல்கள்' திரைப்படத்தில் 'இது ஒரு பொன்மாலைப் பொழுது' பாடலில் இவர் வந்தையடுத்து இவர் தமிழ்நாட்டு மக்களிடம் பிரபலமானர்.

இவர் இயக்குநராக மட்டுமில்லாமல் திரைப்பட நடிகர், சின்னத்திரை நடிகராகவும் இருந்தவர். குறிப்பாக தமிழ்நாட்டில் பிரபலமான 'சரவணன் மீனாட்சி' தொடரில் சரவணனின் தந்தையாக வந்து பார்வையாளர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருந்தார்.

இவர் நடிகை சரண்யாவை திருமணம் செய்தபின் விவாகரத்துப்பெற்றார். பின் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்துவந்த இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானார். இதன் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன் மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார். இவரின் இழப்பு திரையுலகிற்கும் சின்னத்திரைக்கும் பேரிழப்பாகும்.

'மனசுக்குள் மத்தாப்பூ', 'சின்னப்பூவே மெல்லப் பேசு', 'தூரம் அதிகமில்லை', 'பறவைகள் பலவிதம்', 'தூரத்துப் பச்சை', 'கல்யாணக் காலம்' போன்ற படங்கள் ராபர்ட் - ராஜசேகர் ஆகிய இருவரும் இணைந்து இயக்கிய படங்களாகும்.

Last Updated : Sep 9, 2019, 8:51 AM IST

ABOUT THE AUTHOR

...view details