தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கே.பி எனது குருநாதர் - ரகுமான் நெகிழ்ச்சி - kp birthday special

கே.பாலசந்தர் பிறந்தநாளை முன்னிட்டு அவர் குறித்த நினைவுகளை நடிகர் ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கே.பி
கே.பி

By

Published : Jul 9, 2021, 5:12 PM IST

இயக்குநர் கே.பாலசந்தரின் 91ஆவது பிறந்தநாள் இன்று (ஜூலை 9) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அவர் குறித்த நினைவுகளை ரசிகர்கள், திரையுலகினர் பலரும் சமூக வலைதளங்கள் மூலமாக வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பாலசந்தரின் பிறந்தநாள் குறித்து நடிகர் ரகுமான், "கே.பியின் 91ஆவது பிறந்த நாள் இன்று. என் வாழ்கையில் மறக்க முடியாத, நான் என்றும் வணங்கும் குருநாதருக்கு நிகரானவர் கே.பாலச்சந்தர். ஒவ்வொரு நடிகனும், நடிகையும் அவரது படத்தில் முகம் காட்ட ஆசையுடன் காத்திருந்த காலத்தில்தான், எனக்கு வரமாக அவரது 'புதுப்புது அர்த்தங்கள்' என்ற மாபெரும் வெற்றி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே நான் தமிழ் சினிமாவில் நடித்திருந்தாலும் இந்தப் படம் எனக்குத் தென்னிந்திய சினிமாவில் ஒரு தனி அடையாளத்தைக் கொடுத்து .

என் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது என்பதில் நன்றியுடன் பெருமைப்படுகிறேன். கே.பியின் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைப்பதே பாக்கியம் என்றிருக்க, எனக்கு மீண்டும் அவரது படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெரிய அதிர்ஷ்டம்.

அவருடைய எல்லா படங்களுமே காலத்தை வென்று நிற்பவை. இன்றும் தினமும் ரசிகர்களிடமிருந்து 'புதுப்புது அர்த்தங்கள்' படத்துக்குப் பாராட்டுகள் வந்து கொண்டே இருக்கிறது. கே.பி நம்முடன் இல்லை என்றாலும், அவர் என்னைப் போன்ற கலைஞர்கள் மனதிலும், ரசிகர்கள் மனதிலும் என்றென்றும் வாழ்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:வாத்தியாரை நினைவுகூர்ந்த கமல்

ABOUT THE AUTHOR

...view details