சென்ற வாரம் நடந்த 'தர்பார்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ராகவா லாரன்ஸ், கமல்ஹாசன் குறித்து தனது கருத்தை தெரிவித்தார். மேலும் அவரின் பேச்சு கோலிவுட் வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பியது. இதனைத்தொடர்ந்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் நடிகர் கமல்ஹாசனை சென்று சந்தித்ததாகத் தெரிவித்தார்.
மேலும் அதில், அண்மையில் தான் மேடையில் கூறிய ஒரு கருத்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் குறித்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு விமர்சிக்கப்பட்டது என்றும் தனது பேச்சு வேண்டுமென்றே தவறாகத் திரித்துப் பரப்பப்படுகின்றது எனவும் தான் ஏற்கனவே விளக்கமளித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.