தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காமல் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு சேவை செய்ய வேண்டுமா என நண்பர்களும் தனது தாயாரும் தன்னிடம் கேள்வி எழுப்புவதாக தனது முகநூல் பக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், 'தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் ஒரு சில நாள்களுக்கு முன் திறக்கப்பட்டதை அடுத்து கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது. இதைபார்த்த எனது நண்பர்களும் தாயாரும் சில கேள்விகளை எழுப்பினார்கள். 'நாம் மற்றவர்களுக்கு சேவை செய்ய மிகவும் கடினமாக உழைத்துவருகிறோம். ஆனால் பலர் பொறுப்பில்லாமல் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காமல் டாஸ்மாக் கடைகளுக்குச் சென்று குடித்து தங்களுக்கும் பிறருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறார்கள். இவர்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டுமா?' என்று என்னிடம் கேட்கின்றார்கள்.