நடிகர் விதார்த், ஜார்ஜ் மரியான், ரவீனா ரவி ஆகியோர் நடிப்பில் 2017ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கிடாரியின் கருணை மனு'. சுரேஷ் சங்கையா இயக்கிய இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.
‘சத்திய சோதனை'- பிரேம்ஜியுடன் இணைந்த 'பிக் பாஸ்' பிரபலம் - பிரேம்ஜி
நடிகர் பிரேம்ஜி நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிகை ரேஷ்மா நடிப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Premji
இதையடுத்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கும் படத்தில் நடிகர் பிரேம்ஜி அமரன் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக 'பிக் பாஸ் 3' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரேஷ்மா நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் போஸ்டரை நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
‘சத்திய சோதனை' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சமீர் பரத் ராம், டச்வுட்ஸ் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. விரைவில் படத்தின் கூடுதல் தகவல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.