மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. இதில் ரெஜிஷா விஜயன், யோகிபாபு, லால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கலைப்புலி தாணு தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இயக்குநர் மாரிசெல்வராஜ்-கலைப்புலி தாணுவை வாழ்த்திய பிரசாந்த்! - நடிகர் பிராசாந்த் படங்கள்
சென்னை: 'கர்ணன்' திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவை நடிகர் பிரசாந்த் நேரில் சென்று வாழ்த்தினார்.

Prasanth
முன்னதாக ஏப்ரல் 9ஆம் தேதி வெளியான இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றிபெற்றது. இப்படத்தைப் பார்த்த திரைப் பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டிவருகின்றனர்.
இந்நிலையில், இந்தப் படத்தைப் பார்த்து நடிகர் பிரசாந்த் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குநர் மாரி செல்வராஜை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது.