தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத் தேர்தல் மைலாப்பூரில் அமைந்திருக்கும் புனித எப்பாஸ் பள்ளியில் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியை எதிர்த்து, இயக்குநர் பாக்கியராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணி களம் இறங்கியது. இந்த தேர்தலுக்காக புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் பல நிபந்தனைகளுடன் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
'சுவாமி சங்கரதாஸ் அணிக்கு வெற்றி பிரகாசமாக இருக்கிறது' - நடிகர் பிரசாந்த் - Actor Prasanth
சென்னை: சுவாமி சங்கரதாஸ் அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று, அவ்வணியின் சார்பாக பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் பிரசாந்
வாக்குப்பதிவிற்கு நடுவே திரைப் பிரபலங்கள் ஈடிவிபாரத்திற்கு பிரத்யேகமாக பேட்டியளித்தனர்.
அப்போது சுவாமி சங்கரதாஸ் அணியின் சார்பாக பொருளாளர் பதிவிக்கு போட்டியிடும் பிரசாந்த், தங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என தெரிவித்தார்