'நேர்கொண்ட பார்வை' பட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் மீண்டும் ஹெச். வினோத் இயக்கத்தில் நடித்துவருகிறார். 'வலிமை' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர் தயாரித்துவருகிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவுள்ளது. இப்படத்தின் நாயகியாக யாமி கெளதம் நடிக்க ஒப்பந்தமாகிவிட்டார்.
விரைவில் அஜித்துடன் இணைந்து நடிப்பேன் - பிரசன்னா நம்பிக்கை - அஜித் வலிமை
அஜித்துடன் நடிக்க முடியாதது எனக்கு மிகுந்த கவலையளித்தாலும் உங்களுடைய அன்பால் இதிலிருந்து மீண்டுவிட்டேன் என நடிகர் பிரசன்னா கூறியுள்ளார்.
இந்நிலையில், இப்படத்தில் பிரசன்னா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ’வலிமை படத்தில் அஜித்துடன் நான் நடிக்க வேண்டும் என்று பலரும் விரும்பி எனக்கு வாழ்த்து சொன்னீர்கள். அதற்கான பேச்சுவார்த்தை நடந்ததும் உண்மைதான். என்னுடைய திரை வாழ்க்கையில் மிகப்பெரிய அறிவிப்பாக இச்செய்தியை அறிவிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த வாய்ப்பு இந்தமுறை கிடைக்கவில்லை. விரைவில் அஜித்துடன் இணைந்து நடிப்பேன் என்று நம்புகிறேன். அவருடன் நடிக்க முடியாதது எனக்கு மிகுந்த கவலையளித்தாலும் உங்களுடைய அன்பால் இதிலிருந்து மீண்டுவிட்டேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் வாசிங்க: என்னது வலிமை படத்தில் நான்கு ஹீரோயின்களா?