தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'மறதி ஒரு தேசிய வியாதி' - நடிகர் பிரசன்னா வேதனை

சென்னை: சமூக வலைத்தளத்தில் ஹேஷ்டேகுகள்  மாறும் ஆனால், மாற வேண்டியது எதுவும் மாறாது என நடிகர் பிரசன்னா வேதனை தெரிவித்துள்ளார்.

நடிகர் பிரசன்னா
நடிகர் பிரசன்னா

By

Published : Jul 5, 2020, 5:03 PM IST

சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சாத்தான்குளம் காவல் துறையினரை சிபிசிஐடி காவலர்கள் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்த அதிர்ச்சி சம்பவம் அடங்குவதற்குள் புதுக்கோட்டையில் ஏழு வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த இரு சம்பவங்களுக்கும் திரைப் பிரபலங்கள் பலரும் தங்களது எதிர்ப்பையும், கண்டனங்களையும் சமூக வலைதளம் வாயிலாக பதிவிட்டு வந்தனர்.

இதனிடையே, இந்தச் சம்பவம் தொடர்பாக நடிகர் பிரசன்னா தனது ட்விட்டர் பதிவில், தனது வேதனையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, 'ஜெயலலிதாவோ, ஜெயராஜோ அல்லது ஜெயப்பிரியாவோ, அது அடுத்த பரபரப்பான மரணம், கொலை, பாலியல் வன்புணர்வு குறித்த செய்தி வரும் வரைதான். அதன்பிறகு நீதி கேட்கும் ஹேஷ்டேகுகள் மாறிவிடும். ஆனால், மாறவேண்டியது எதுவும் மாறாது. இவையெல்லாம் சோர்வை ஏற்படுத்தி விட்டன. சோகம் மட்டுமே எஞ்சுகிறது. மறதி ஒரு தேசிய வியாதி' எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:சிறுமி ஜெயப்பிரியாவிற்கு நீதி வேண்டும்: வரலட்சுமி சரத்குமார்!

ABOUT THE AUTHOR

...view details