தென்னிந்திய மொழி படங்களில் வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் பிரகாஷ்ராஜ். சமீப காலமாக பல்வேறு சர்ச்சைக்குரிய அரசியல் கருத்துகளை கூறி வந்தார். இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் வரும் நாடளுமன்றத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட இருப்பதாக தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார்.
நாடாளுமன்ற தேர்தல் - விசில் சின்னத்தில் களமிறங்கும் பிரகாஷ்ராஜ்! - நாடாளுமன்ற தேர்தல் 2019
பெங்களூரு: வரும் நாடாளுமன்ற தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கும் வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ், விசில் சின்னத்தில் போட்டியிடவுள்ளார்.
விசில் சின்னத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் போட்டி
இதனையடுத்து, நடிகர் பிரகாஷ்ராஜ் மத்திய பெங்களூரு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இதைத்தொடர்ந்து, தேர்தலில் போட்டியிடும் நடிகர் பிரகாஷ்ராஜூக்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னம் அளித்துள்ளது.
பாஜக அரசை வெளியேற்றுவதே தனது லட்சியம் எனக் கூறி அரசியலில் ஈடுபடும் நடிகர் பிரகாஷ்ராஜ், மத்திய பெங்களூர் தொகுதியில் தற்போதைய பாஜக எம்பியாக இருந்து வரும் மோகன் என்பவரை எதிர்த்து போட்டியிடுகிறார்.