தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர், மன அழுத்தம் காரணமாக ஜூன் 14ஆம் தேதி மும்பையில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சுஷாந்த் சிங்கின் மரணம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இவரது மரணத்திற்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இனி எந்தக் கனவுகளையும் சாகடிக்க விடக்கூடாது - பிரகாஷ் ராஜ் உருக்கம் - சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம்
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் உருக்கமான வீடியோ ஒன்றை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
பிரகாஷ் ராஜ்
அந்த வகையில், நடிகர் பிரகாஷ் ராஜ் தனது சமூகவலைதளத்தில் உருக்கமான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், மன அழுத்தத்துடன் நான் வாழ்ந்திருக்கிறேன். உயிர் பிழைத்திருக்கிறேன். என்னுடைய சதையை விட காயங்கள் ஆழமானது. இதைத் தாங்க சிறுவன் சுஷாந்த் சிங்கால் முடியவில்லை. நாம் ஒன்றாக நிற்போம், இனி எந்தக் கனவுகளையும் சாகடிக்க விட்டுவிடக்கூடாது" என கூறியுள்ளார்.