'பாகுபலி', 'சாஹோ' படங்களுக்கு பிறகு நடிகர் பிரபாஸ் அடுத்த படத்தில் நடிக்க தயாராகிவிட்டார். 'ஜில்' பட இயக்குநர் ராதா கிருஷ்ணன் இயக்கும் இந்த படத்தை கோபி கிருஷ்ணா மூவிஸ் யூவி கிரேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
அடுத்த பிரம்மாண்ட படத்துக்கு தயாரான 'பாகுபலி'!
'பாகுபலி' நாயகன் பிரபாஸின் புதிய படத்திற்கான பணிகள் தொடங்கியுள்ளது.
prabhas
இப்படத்தில் பிரபாஸூக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகிறது. மேலும் மற்ற மொழிகளிலும் இந்த படம் டப்பிங் செய்து வெளியிடப்படவுள்ளது. இப்படத்திற்காக பிரமாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது.
இதையும் வாசிங்க: ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த பிரபாஸ்!