தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வலியில் துடிக்கும் பவர் ஸ்டார் - கண்கலங்க வைக்கும் புகைப்படங்கள் - பவர் ஸ்டார் மருத்துவமனையில் அனுமதி

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் (power star Srinivasan) உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்றுவரும் வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

பவர் ஸ்டார்
பவர் ஸ்டார்

By

Published : Nov 15, 2021, 12:47 PM IST

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், லத்திகா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து, கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் மூலம் மேலும் பிரபலமானார்.

இவர் தற்போது வனிதா விஜயகுமாருடன் இணைந்து பிக்கப் டிராப் படத்தில் நடித்துவருகிறார். பவர் ஸ்டார் சீனிவாசன் கடந்த செப்டம்பர் மாதம் படப்பிடிப்பிலிருந்த போது உயர் ரத்த அழுத்தம் (Hypertension) காரணமாக மயங்கி விழுந்தார்.

பவர் ஸ்டார் சீனிவாசன்

இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சில நாள்களில் வீடு திரும்பினார். இந்நிலையில், பவர் ஸ்டார் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகக் கூறப்படும் வீடியோ, புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

பவர் ஸ்டார் எதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அல்லது இவர் செப்டம்பர் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ தான் தற்போது பகிரப்பட்டதா? என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.

இதையும் படிங்க:நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

ABOUT THE AUTHOR

...view details