தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

’விஷாலுக்கு மதிக்கவே தெரியாது’ - கொந்தளிக்கும் ’பவர் ஸ்டார்’ - விஷால்

சென்னை: தயாரிப்பாளர் சங்கத்தில் அவமானப்பட்டு அசிங்கப்பட்டதால்தான் தற்போது தேர்தலில் போட்டியிடுவதாக நடிகர் ’பவர் ஸ்டார்’ சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

power star
power star

By

Published : Nov 7, 2020, 10:47 AM IST

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் வரும் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ’முன்னேற்ற அணி’யின் சார்பில் செயற்குழு உறுப்பினராக நடிகர் ’பவர் ஸ்டார்’ சீனிவாசன் போட்டியிடுகிறார். அவர் நமது இடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியின் கேள்வி பதில் தொகுப்பு இதோ,

தேர்தலில் நீங்கள் வெற்றி பெற்றால் முதலில் செய்யக்கூடிய விஷயம் என்னவாக இருக்கும்?

வெளிவராத படங்கள் அதிகளவில் தேங்கிக் கிடக்கின்றன. அவற்றை வெளியிடுவதற்கு எஃப்.எம்.எஸ், சாட்டிலைட் விற்பனை போன்ற செயல்பாடுகளில் முயற்சி எடுப்போம். இவை தவிர இன்னும் ஏராளமான திட்டங்கள் வைத்துள்ளோம். அதை நாங்கள் வெற்றி பெற்ற பின்பு செயல்படுத்துவோம்.

உங்கள் தேர்தல் பிரச்சாரம் என்னவாக இருக்கும்?

சிறு படத் தயாரிப்பாளர்கள் வீடு போன்றவற்றை விற்று விட்டு தான் படம் எடுக்க வருகின்றனர். அப்படி படம் எடுக்கும்போது மேலும் பணமின்றி பாதியிலேயே படம் நின்று விடுகிறது. அவர்களுக்கு முதலீடு செய்யவும் யாரும் முன்வருவதில்லை. இதனால் சிலர் தற்கொலைக்கு கூட முயற்சிக்கின்றனர். அவ்வாறு பாதிக்கப்படும் தயாரிப்பாளர்களை அரவணைத்து அவர்களின் தேவையை நிறைவு செய்வோம்.

சிறிய படங்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்று கூறும் உங்கள் படம் ஏதேனும் தயாரிப்பாளர் சங்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதா?

என்னுடைய படங்கள் தயாரிப்பாளர் சங்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் தான், இந்த அணியில் நான் இடம் பெற்றுள்ளேன். பாதிப்பில்லாமல் எந்த தயாரிப்பாளரும் இங்கில்லை. ஒவ்வொரு தயாரிப்பாளரும் ஒவ்வொரு விதமாக பாதிக்கப்பட்டு இருக்கிறோம். நாங்கள் தேர்தலில் வெற்றி பெற்றபின் இந்த பிரச்சனைகளை சட்டரீதியாக அணுகுவோம்.

’விஷாலுக்கு மதிக்கவே தெரியாது’ - ’பவர் ஸ்டார்’ குற்றச்சாட்டு!

வியாபார பரிவர்த்தனையில் உங்கள் படங்கள் என்னென்ன பிரச்சனைகளை சந்தித்துள்ளது?

சிறு தயாரிப்பாளர் படங்களை வாங்கக்கூடாது என்று ஏற்கனவே இருந்த நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். அது யார் என தற்போது கூற முடியாது. மேலும், ஏற்கனவே இருந்த தலைவர்கள் சிறு தயாரிப்பாளர்களை மதிப்பதில்லை. நிறைய விஷயங்களில் அவமானப்பட்டு, அசிங்கப்பட்டுதான் வெளியில் வந்திருக்கிறோம். இனி வரக்கூடிய சிறு படத் தயாரிப்பாளர்கள் அவ்வாறு பாதிக்கக்கூடாது. அந்த குறைகளை நிறைவு செய்வதற்குத்தான் முன்னேற்ற அணியை துவங்கியுள்ளோம்.

தயாரிப்பாளர் சங்கத்தில் எந்த மாதிரியான அவமானங்களை சந்தித்தீர்கள்?

நடிகர் விஷால் தலைவராக இருந்தபோது எங்களை மதித்ததே இல்லை. கேட்டால் சீனியர்கள் என்று ஓரமாக வைத்து விடுவார். அந்த வருத்தம் எங்கள் அனைவருக்குமே உண்டு. ஒரு தலைவராக இருந்தால் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும். ஆனால் அவர் அதை செய்யவில்லை.

உங்கள் அணியின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

சிறு படத் தயாரிப்பாளர்களின் ஆதரவு எங்களுக்கு உள்ளதால் எங்கள் அணியின் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது.

இதையும் படிங்க:தமன்னாவை திருமணம் செய்ய ஆசைப்படும் யோகி பாபு!

ABOUT THE AUTHOR

...view details